144 தடை என்றால் என்ன
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 144 தடை பற்றிய விவரம் வருமாறு:–
மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், மக்களுக்கு தொல்லை ஏற்படுவதை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், பொது அமைதி, கலவர தடுப்பு ஆகிய நோக்கங்களுக்காகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும், குறிப்பிட்ட பகுதி, நகரம் ஆகிய இடங்களுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்.
இந்த தடை காலத்தில், தமிழகத்தில் யாரும் பொது இடங்களில் 5 பேராக கூடி செல்ல முடியாது.
உரிமம் பெற்றுள்ள துப்பாக்கிகளை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த தடையை மீறி நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் 188–ம் பிரிவின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும். தடையை மீறியதால் மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தடை உத்தரவை யாரும் மீறினால், மனித உயிருக்கு சேதம், சுகாதார கேடு, கலவரம் ஏற்பட்டு பொது அமைதி குலைந்துபோனால் அவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
No comments:
Post a Comment