Wednesday, May 7, 2014

ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்: மே 7- 1861
ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்: மே 7- 1861
இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கன மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877-ம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளை புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.

இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வம்சம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்.

Tuesday, May 6, 2014

இந்தியாவின் முதல் தபால் தலை 1854-ம் ஆண்டு மே 6-ந்தேதி வெளியிடப்பட்டது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1840 - பென்னி பிளாக் அஞ்சற்தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அநுமதிக்கப்பட்டது. * 1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது. * 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34-வது ராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8-ல் தூக்கிலிடப்பட்டான். * 1860 - கரிபால்டி தனது தொண்டர் படைகளுடன் இரண்டு சிசிலிகளின் பேரரசைக் கைப்பற்றுவதற்காக ஜெனோவாவில் இருந்து புறப்பட்டான்.

* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது. * 1889 - ஈபிள் டவர் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது. * 1910 - ஐந்தாம் ஜார்ஜ் ஐக்கிய ராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான். * 1930 - ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர். * 1937 - ஜெர்மனியின் ஹின்டென்பேர்க் என்ற வான்கப்பல் (zeppelin) நியூ ஜெர்சியில் தீப்பிடித்து அழிந்தது. * 1942 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பைன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் ஜப்பானிடம் சரணடைந்தனர். * 1945 - இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராக் நகரில் ஆரம்பமானது.

* 1967 - ஜாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார். * 1976 - இத்தாலியின் ஃபிறியூல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 989 பேர் கொல்லப்பட்டனர். * 1994 - ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. * 2001 - சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மசூதி ஒன்றிற்கு சென்றார். மசூதிக்குச்சென்ற முதலாவது திருத்தந்தை இவரேயாவார்.

Saturday, May 3, 2014

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேற்றம்

http://www.newindianews.com/photos/thumbs/2014/05/india_002.jpg
உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பெற்றுள்ளது.
உலக வங்கி சார்பில் சர்வேதச ஒப்பிட்டு திட்டம் என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டு     வருகிறது. இந்த ஆய்வின் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில்உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதில் முதல் இடத்தை அமெரிக்காவும், 2வது இடத்தை சீனாவும் பெற்றுள்ளனஇந்தியா 3வது இடத்தை பெற்றுள்ளது
2005ம் ஆண்டில் 10வது இடத்தில் இருந்த இந்தியா, 2011ல் மிக வலிமையாக முன்னேறி இந்த இடத்தை பெற்றுள்ளது குறிபிடத்தக்கது.
இதற்கு முன்பு பொருளாதாரத்தில் வலிமையாக இருந்த ஜப்பான்இங்கிலாந்தை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.
மேலும்பிரான்சுஇத்தாலி ஆகிய நாடுகள் பழைய நிலையிலேயே தொடர்ந்து நிற்கின்றன என்றும் ஜெர்மனி ஓரளவு மட்டும் முன்னேறி உள்ளது எனவும் குறிப்பிடபட்டுள்ளது.



Thursday, May 1, 2014



தொழிலாளர் தினம்: மே-1

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.

தொழிலாளர் தினம்: மே-118-ம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை 

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்
.

NFTCLன் எல்லை விரிகின்றது

NFTCLன் எல்லை விரிகின்றது

கேரளாவில் எழுச்சிமிகு NFTCL மாநில அமைப்பு கூட்டம்

      27-4-14  காலை 11 மணி அளவில் கேரளாவில் 

உள்ள  எர்ணாகுளம்  மாவட்டம்  பெரம்பாவூரில், 

NFTE மாநில தலைவர் தோழர் ராதாகிருஷ்ணன் 

தலைமையில் NFTCL மாநில அமைப்புக் கூட்டம் 

நடைபெற்றது.

தோழர் ராதாகிருஷ்ணன் தனது தலைமையுரையில், இலாகா பணியிலிருந்து சில மாதங்களுக்கும் முன் ஓய்வு பெற்ற பின்னும், ஓய்வு எடுத்துக் கொள்ளாமல், நமது தொலைத் தொடர்பு துறையில் கடும் சுரண்டலுக்குஆளாகும் ஒப்பந்த ஊழியர்களை அணி திரட்ட,அவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சிய வெறியோடு செயல்படும் தோழர் மதிவாணன் அவர்களை மனமுவந்து வரவேற்பதாக கூறியது நெகிழ்ச்சி தருவதாக அமைந்தது.   தோழர் C.K.மதிவாணன், அகில இந்திய துணைப் பொதுச்செயலர்  சிறப்புரை ஆற்றினார். NFTCL துவங்கப்பட்டதன் நோக்கம், லட்சியம் ஆகியவற்றை விளக்கினார். 


AITUC, அகில இந்திய அமைப்பின் வழிகாட்டுதலோடு NFTCL துவக்கப்பட்டுள்ளது. 

BSNLல் தற்போது 60 சத பணிகளை ஒப்பந்த ஊழியர்கள்தான் 
செய்து வருகின்றனர். ஒருசில வருடங்களில் நிரந்தர ஊழியர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி அப்பாவி ஒப்பந்த ஊழியர்களை சுரண்ட திட்டமிடும் அரசின் சதியை முறியடிக்க வேண்டும். AirTel, 
Vodofone போன்ற  தனியார் துறையில் பணியாற்றும் ஒப்பந்த 
ஊழியரின் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. இது போன்ற பிரச்னைகளை அகில இந்திய அளவில் எடுத்து தீர்த்திடவே NFTCL துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் 
ஒப்பந்த ஊழியர்கள் அமைப்புரீதியாக திரண்டு வருகின்றனர்.
அவர்களை ஒருங்கிணைத்து NFTECL விரைவில் அகில இந்திய அமைப்பாக பரிணமிக்கும் என்று விளக்கினார் தோழர் C.K.M.

கடந்த 4 ஆண்டுகளாக  BSNLEU சங்கத்தின் தவறான  உடன்பாடு  காரணமாக BSNL ஊழியர்க்கு போனஸ் மறுக்கபட்டபோதும், 
தோழர் ஆனந்தன், கடலூர் மாவட்டச் செயலராக காண்ட்ராக்ட் ஊழியர்க்கு போனஸ் பெற்ற சாதனையை விளக்கினார்

கேரளத் தலைவர்கள் கேரள மாநிலச் செயலர் 

தோழர் தர்மதாஸ், அகில இந்திய நிர்வாகி 

தோழர் மைக்கேல், மூத்த தோழர் பௌலோஸ் 

உட்பட பலர் கலந்துகொண்டனர்.

NFTCL -ன் தமிழ் மாநில செயலர் தோழர் ஆனந்தன் 

தமிழகத்தில்  காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு செய்த 

சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

சமீபத்தில் கடலூரில் இறந்த ஒப்பந்த ஊழியரின்  

குடும்பத்தாருக்கு இழப்பீடு பெற்று கொடுத்ததோடு 

அவரது மனைவிக்கு வேலை வாங்கிக் கொடுத்ததையும் 

விளக்கினார். 

தோழர் மோகன் குமார் கேரளா  NFTCL - ன் மாநிலச் செயலராக தேர்வுசெய்யப்பட்டார்.


கடலூரிலிருந்து மாநில செயலர் தோழர் S.ஆனந்தன் தலைமையில் மாநில உதவி செயலர்( NFTCL ) 

தோழர் .K.முத்துக்குமார் TTA  உள்ளிட்ட 5 தோழர்களும் 



கோவையிலிருந்து தோழர்கள் சுப்பராயன், ராமகிருஷ்ணன், NFTCL  மாநில அமைப்பு செயலர்  தோழர் குமரேசன் உள்ளிட்ட தோழர்களும்   கலந்து  கொண்டு சிறப்பித்தனர் 

 புதிய நிர்வாகிகளுக்கு நமது தமிழ்நாடு மாநில சங்கத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 



































Wednesday, April 23, 2014

144 தடை என்றால் என்ன

144 தடை என்றால் என்ன 


தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 144 தடை பற்றிய விவரம் வருமாறு:–
மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், மக்களுக்கு தொல்லை ஏற்படுவதை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், பொது அமைதி, கலவர தடுப்பு ஆகிய நோக்கங்களுக்காகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும், குறிப்பிட்ட பகுதி, நகரம் ஆகிய இடங்களுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்.
இந்த தடை காலத்தில், தமிழகத்தில் யாரும் பொது இடங்களில் 5 பேராக கூடி செல்ல முடியாது.
உரிமம் பெற்றுள்ள துப்பாக்கிகளை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த தடையை மீறி நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் 188–ம் பிரிவின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும். தடையை மீறியதால் மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தடை உத்தரவை யாரும் மீறினால், மனித உயிருக்கு சேதம், சுகாதார கேடு, கலவரம் ஏற்பட்டு பொது அமைதி குலைந்துபோனால் அவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Friday, April 4, 2014

தோழர்களே!தோழியர்களே!! 
நமது மாநிலசங்கத்திற்க்கு  NFTCL  கிடைத்திட்ட முதல் வெற்றி!!!
01-04-2014 முதல் நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு VDA  உயர்ந்துள்ளது. மாநில சங்கத்தின் தொடர் முயற்ச்சியின் காரணமாக உயர்த்தப்பட்ட* VDA * அனைத்து மாவட்ட தோழர்களுக்கும்,தோழியர்களுக்கும் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நமது மாநில சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தொழிலாளர் நலத்துறை அமலாக்க அதிகாரி ( LEO )  அவர்கள் நமது BSNL தலைமை பொது மேலாளர் அவர்களுக்கு உத்தரவு வழங்கியுள்ளார்.இந்த உத்தரவை பயன்படுத்தி அனைத்து மாவட்டத்திலும்  நமது ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய VDA-உடன் கூடிய ஊதியம் கிடைத்திட NFTCL மாநில நிர்வாகிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.மேலும் விபரங்களுக்கு மாநில செயலர் தோழர்  S.ஆனந்தன்  அவர்களை அணுக வேண்டுகிறோம் 






Add caption